சென்னை: ‘கல்லூரியில் படிக்கும் உங்கள் மகள் குற்றம் செய்துவிட்டதாக கூறி, மொபைல் போனில் பேசும் நபர்களிடம் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தி உள்ளார்.
இப்போதைய இணைய உலகம்… இம்சையான உலகம் என்று சொல்லலாம். காலம் சுருங்கிவிட்டாலும், கண்முன் நடக்கும் குற்றங்கள் என்னவோ குறையவில்லை. .
தொழில்நுட்பம் வளர,வளர நுட்பமாக குற்றங்கள் தினுசு, தினுசாக உதயமாகிறது. அப்படி நிகழும் ஒரு குற்றங்களில் ஒரு வகை, அவற்றில் இருந்து தப்பியிருப்பது எப்படி என்று முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது;
கல்லூரியில் படிக்கும் மகள் பெயரை சொல்லி அவரின் தாயாருக்கு மொபைல் போனில் அழைப்பு வருகிறது. உங்கள் மகள் பாலியல் தொழில் செய்கிறார், கையும், களவுமாக பிடிபட்டார் என்று காவல்துறையில் இருந்து பேசுவதாக ஒருவர் கூறுகிறார். இதைக் கேட்டு தாய் மயங்கி விழுகிறார்.
சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்த பின்னர், அந்த குறிப்பிட்ட போன் நம்பரை தொடர்பு கொள்ளும் தாய், ‘என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்கிறார்.
‘ஒரு லட்சம் ரூபாய் அனுப்புங்கள், எல்லாம் சரி செய்துவிடுகிறோம்’ என்று மறுமுனையில் கூற. பணத்தை தாய் அனுப்புகிறார்.
பின்னர் தமது மகளுக்கு தாய் போன் செய்தபோது தான், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதும், மோசடிப் பேர்வழிகள் தாயிடம் பொய்யான ஒரு சம்பவத்தை சொல்லி மிரட்டி, தாயிடம் பணம் பறித்திருப்பதும் தெரியவருகிறது.
இதுபோன்ற சம்பவம் வேறு ஒரு தாயாருக்கு நிகழ்ந்திருக்கிறது.
‘கல்லூரியில் படிக்கும் உங்கள் மகள் போதை பொருள் கடத்தி சிக்கிக் கொண்டுள்ளார், இதோ எங்கள் பக்கத்தில் தான் நின்றுகொண்டு அழுகிறார்’ என்று கூறி போனில் ஏதோ ஒரு பெண்ணின் அழுகுரலை ஒலிக்க செய்கின்றனர்.
இதை கேட்ட தாய் அங்கேயே மாரடைப்பு வந்து இறந்துபோகிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. உங்கள் மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.
இப்படி ஏதேனும் ஒரு போன்கால் வந்தால் அதை சட்டை செய்ய வேண்டாம்.
இவ்வாறு சைலேந்திரபாபு அந்த வீடியோ பதிவில் கூறி தாய்மார்களை அலர்ட் செய்துள்ளார்.
+ There are no comments
Add yours