தண்ணீரினை திருடிய வடமாநிலத்தவர்கள் !

Spread the love

தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லைப் பெரியாறு விவசாய நீர் பாசன கால்வாயில் தண்ணீரை திருடிய வட மாநிலத்தவர்களை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் புகாரினை தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த பொதுப்பணி துறையினருக்கு விவசாயிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப் பெரியாறு விவசாய நீர்ப்பாசன கால்வாய் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடியினை செய்து வருகின்றனர்.

பொதுப்பணித் துறையினரின் மூலம் விவசாயிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

தற்பொழுது இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு விவசாய நீர் பாசன கால்வாய் மூலம் விவசாயிகளுக்கு பொதுப்பணி துறையினர் போதிய அளவில் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் உத்தமுத்து கால்வாயில் கடந்த சில தினங்களாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வட மாநில பதிவு எண் கொண்ட லாரிகளில் மோட்டாரினை பயன்படுத்தி தண்ணீரினை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனைப் பார்த்த விவசாயிகள் தண்ணீரினை எடுத்துச் செல்வதால் நெல் விவசாய பாசனத்திற்கு போதிய அளவில் தண்ணீர் கிடைக்காது எனக் கூறி பொதுப்பணி துறையினரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரினைத் தொடர்ந்து உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தண்ணீர் திருடுபவர்கள் குறித்து பொதுப்பணி துறையினர் புகார் அளித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் மோட்டாரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாய பாசனத்திற்காக வரும் தண்ணீரினை திருடிய வடமாநிலத்தவர்களை கைது செய்த போலீசாரையும் பொதுப்பணித்துறையினரையும் விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours