சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டும் அல்லாமல், தாம்பரம் மாநகரம் சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாகவும் பிரபல ரவுடியான கிழக்கு தாம்பரம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்ற சீசிங் ராஜா (49) தேடப்பட்டு வந்தார். தாம்பரம் காவல் ஆணையர், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஓட்டி தேடி வந்தார். ஆந்திராவில் பதுங்கி இருந்த சிசிங் ராஜா போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவரை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரவுடி சீசிங் ராஜாவை சென்னை நீலாங்காரை பகுதியில் உள்ள அக்கறை எஸ்கான் கோயில் பகுதியில் வைத்து போலீஸார் தற்காப்புக்காக என்கவுன்டர் செய்துள்ளனர். அப்போது, ரவுடி சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயெ உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் துப்பு துலக்கினர். மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் திருவேங்கடம் (33) உட்பட 8 பேர் கைதாகினர்.
இதுஒருபுறம் இருக்க கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என திமுக, அதிமுக, பாஜக, தமாக கட்சிகளை சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைதாகினர்.
இவர்களில் ரவுடி நாகேந்திரன், கடந்த ஜூலை 14ல் போலீஸாரின் என்கவுன்ட்டரில் தீர்த்துக் கட்டப்பட்ட திருவேங்கடம் தவிர மீதம் உள்ள 25 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். 28வது நபராக புதூரைச் சேர்ந்த அப்பு என்பவர் கைதானார். இதில் 29வது நபராக நேற்று சீசிங்க் ராஜா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் ரவுடி நாகேந்திரன், கடந்த ஜூலை 14ல் போலீஸாரின் என்கவுன்ட்டரில் தீர்த்துக் கட்டப்பட்ட திருவேங்கடம் தவிர மீதம் உள்ள 25 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். 28வது நபராக புதூரைச் சேர்ந்த அப்பு என்பவர் கைதானார். இதில் 29வது நபராக நேற்று சீசிங்க் ராஜா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours