மனைவியை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவர். @திருவண்ணாமலை

Spread the love

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சினையில் மனைவியை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசிய கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘திருவண்ணாமலை மாநகரம் பே கோபுரம் முதல் தெருவில் வசிப்பவர் கோபி(36). இவரது மனைவி சரண்யா(29). காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடன் பிரச்சினையில் தம்பதியிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நவ.30-ம் தேதி மீண்டும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சரண்யாவை காணவில்லை. அவரது கைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த சரண்யாவின் பெற்றோர், மகள் வீட்டுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மகள் இல்லை. கோபியிடம் கேட்டபோது, கடந்த 2 நாட்களாக மனைவி சரண்யாவை காணவில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் சரண்யாவின் தாயார் காவேரி கொடுத்த புகாரின் பேரில் கோபி, அவரது தாயார் சிவகாமி ஆகியோரை பிடித்து தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதில், மனைவி சரண்யாவை அடித்துக்கொலை செய்து, அவரது உடலை 8 துண்டுகளாக வெட்டி, டிராவல் பையில் கோபி போட்டுள்ளார். கொலையை மறைக்க அவரது தாயார் சிவகாமி மற்றும் திரு வண்ணாமலை வடமாத்தாதி தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விஜயராகவன் ஆகியோர் உடந் தையாக இருந்துள்ளார்.

பின்னர், கார் ஓட்டுநர் விஜயராகவனை வரவழைத்து, தாய் சிவகாமி மற்றும் பிள்ளைகளுடன் சுற்றுலா சென்றாக தெரிய வருகிறது. செல்லும் வழியில், கிருஷ்ணகிரி அடுத்த சூளகிரி வனப்பகுதியில் சரண்யாவின் உடல் பாகங்களை தனித்தனியாக வீசியுள்ளார். பின்னர், டிராவல் பையையும் வீசிவிட்டு திரும்பி யுள்ளார். சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய கோபி, மனைவியை காணவில்லை எனக் கூறி தேடுவதுபோல் நாடக மாடி உள்ளார். மேலும் குழந்தை களிடம், பாட்டி வீட்டுக்கு தாய் சென்றுள்ளதாக கூறியுள்ளார்’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து, திருவண் ணாமலை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர் கோபி, அவரது தாயார் சிவகாமி, கார் ஓட்டுநர் விஜயராகவன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், சூளகிரி வனப்பகுதியில் இருந்து சரண்யா உடலின் 3 பாகங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆய்வுக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டன. இதர பாகங்களை தேடும் பணி நடைபெறுகிறது.

மேலும், கோபியின் வீட்டில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர். சூளகிரி வனப்பகுதியில் சரண்யாவின் உடல் பாகங்களை தனித்தனியாக வீசியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours