நாக்பூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரின், கடோல்-கல்மேஷ்வர் புறநகர் சாலையில் உள்ள சோன்காம்ப் கிராமத்திற்கு அருகே நேற்று நள்ளிரவில் 7 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அதே சாலையின் மறுபுறத்தில் சோயாபீனை ஏற்றி லாரி ஒன்று வந்துகொண்டிருந்து. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 பேர் மேல்சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours