திருச்செந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் கணக்கில் வராத 86 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் பொட்டல்காடு விளக்கு அருகே தேர்தல் அதிகாரி பொன்மாரி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரில் சோதனை செய்தபோது காரில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது காரின் உரிமையாளர் தரணிஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது உப்பள தொழிலாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் பணத்திற்கான ஆவணங்கள் முறையாக இல்லாதால் அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரிடம் சுமார் 86ஆயிரத்து 750 ரூபாயை ஒப்படைத்தனர்.
+ There are no comments
Add yours