சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தொடங்கியுள்ளது.
இந்தப் படிப்பில் சேர ஏப்ரல். 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்பானது ஓராண்டு காலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனுட ஓர் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
இதழியல் துறையில் அனுபவம் பெற்றவர்களும் – விண்ணப்பிக்கலாம். அப்படிப்பின் கீழ், மொத்தம் 3 தாள்களுக்கான தேர்வு முறை உள்ளது.
அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் www.tnmgrmu.ac.in முகவரியிலோ, epld@tnmgrmu.ac.in இணையதள என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044- 22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours