தமிழ்நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளும், 3 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்களும், ஒரு திருநங்கையும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
இவை தவிர்த்து 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்களையும் சேர்த்து மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வை எழுதியிருந்தனர்.
மாணவர்கள் எழுதிய விடைத்தாளை திருத்தும் பணி கடந்த மாதம் 2 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்தபடியே மே 6 ஆம் தேதியான இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது.
மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் காலை 10 மணி அளவில் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
இதேபோல் அரசு தேர்வுத்துறை இணையதளங்களான www.tnresults.nic.in , www.dge.tn.nic.in ஆகிய தளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். கடந்தாண்டு தமிழ்நாட்டில் 94.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
+ There are no comments
Add yours