பி.ஆர்க் படிக்க ஆசையா… அப்போ இத பாருங்க முதல்ல !

Spread the love

நாட்டா தேர்வு அறிவிப்பு பி.ஆர்க்., படிப்பில் சேர்க்கை பெற எழுதவேண்டிய நாட்டா எனும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இத்தேர்வை நடத்தி வருகிறது.

படிப்பு:

பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)

கல்வி நிறுவனங்கள்:

பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை பெற ‘நாட்டா’ மதிப்பெண் முக்கியம். நாடு முழுவதும் 375 கல்வி நிறுவனங்களில் நாட்டா தேர்வு மதிப்பெண் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

தகுதிகள்: 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ’பகுதி-ஏ’ பிரிவில் 80 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் டிராயிங் மற்றும் காம்போசிஷன் தேர்வு நடத்தப்படுகிறது. பகுதி – பி பிரிவில் விஷ்வல் லாஜிக்கல் டெரிவேஷன், ஆர்க்கிடெக்ச்சர் மற்றும் டிசைன் சார்ந்த பொது அறிவு லாங்குவேஜ், நியூமெரிக்கல் எபிலிட்டி, டிசைன் திங்கிங் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 120 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம்பெறுகின்றன. இத்தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில், பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

https://nata.thinkexam.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்:

சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர், புதுச்சேரி, ஹைதராபாத், பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தேர்வு நாள்:

ஏப்ரல் 6 அன்று தொடங்குகிறது (weekends starting from April to July, 2024) . நாட்டா நுழைவுத் தேர்வு குறித்த பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை, முந்தைய வினாத்தாள் போன்ற கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே NATA_BROCHURE_2024_B.Arch_Exam கிளிக் செய்ய வேண்டும். விபரங்களுக்கு: www.nata.in https://www.nata.in/

நாட்டா தேர்வு முக்கிய குறிப்பு :

ஓர் ஆண்டுக்கு மூன்று முறை நாட்டா தேர்வு நடத்தப்படும். அதில் பெஸ்ட் மார்க், ’பி.ஆர்க்.,” படிப்பு சேர்க்கையின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்கோர் கார்டு இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு செல்லும். இப்போது மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து நாட்டா தேர்வுக்கு ஆன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours