10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மாணவர்கள் தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற கனவுக்கான விதையை விதைக்கும் நேரம் இது.
ஏனென்றால், இது உங்களுக்கான முக்கிய காலகட்டம். உங்கள் கேரியர் சிறப்பாக அமைய உங்களுக்கான பாதையை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு வேலை உங்களுக்கு விமானி (Pilot) ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், உங்களுக்கான சில குறிப்பை இங்கே நாங்கள் கூறுகிறோம். இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 12 ஆம் வகுப்புக்கு பின்னர் நீங்க பைலட் பயிற்சிப் படிப்பைத் தொடரலாம் .
இந்தப் பயிற்சியில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன, முதல் கட்டமாக 20 மணி நேரம் பயிற்சிஅளிக்கப்படும், அப்புறம், தனியே விமானம் ஓட்டும் திறன் இருக்கிறதா என்று ஆராயப்படும் இதையடுத்து ஏர் ரெகுலேஷன், ஏர் நேவிக்கேஷன்,மெட்ரியாலஜி போன்ற சில பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறவேண்டும். இந்தப் பயிற்சி முடிந்ததும் ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸ் வழங்கப்படும்.
அதையடுத்து பயிற்சியாளர்களுடன் சேர்ந்தும், தனியாகவும் 60 மணி நேரம் விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்தவர்கள் பிபிஎல் எனப்படும் பிரைவேட் பைலட் லைசென்ஸ் பெறலாம்.
விமானங்களில் பைலட் ஆகப் பணிபுரியவேண்டும் என்றால் சிபிஎல் எனப்படும் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெறவேண்டும். இதற்காக 250 மணி நேரம் விமானம் ஓட்டும் பயிற்சியைப் பெற வேண்டும்.
ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு விமானம் ஓட்டுதல், இரவு நேரத்தில் விமானம் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளுடன் எழுத்துத்தேர்வும் உண்டு. இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ்பெறலாம்.
+ There are no comments
Add yours