ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் ஏனாத்துாரில் அமைந்து உள்ளது.
டி. சி. எஸ் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி. டெக். , கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் அன்டு பிசினஸ் சிஸ்டம்ஸ்.
பி. காம். பிசினஸ் பிராசஸ் சர்வீஸ், பி. எஸ். சி. , கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் காங்னிட்டிவ் சிஸ்டம்ஸ் ஆகிய மூன்று மேம்படுத்தப்பட்ட பட்டப்படிப்புகளை நேற்று அறிமுகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டி. சி. எஸ். , கல்வி நிறுவன தொடர்பு துறை தலைவர் சுசிந்திரன், பேராசிரியர்களுக்கான பயிற்சி பட்டறைகள், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்,பாடத்திட்டம் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக டி. சி. எஸ்., குழு, சங்கரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வெங்கடரமணன், ரத்தினகுமார் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்கரா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஸ்ரீராம் செய்திருந்தார்.
+ There are no comments
Add yours