தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்காக பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று இயற்பியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இயற்பியல் வினாத்தாள் எப்படி இருந்தது என்பது குறித்து மாணவர்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கியது. வரும் மார்ச் 22-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10:15 முதல் மதியம் 1:15 வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் 3,302 மையங்களில் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, தமிழகம் முழுவதும் 7.25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
முதல் 2 நாட்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என மொழிப்படங்களுக்கான தேர்வு நடைபெற்றதை தொடர்ந்து, 8-ந் தேதி பயோ வேதியியல், மற்றும் கம்பியூட்டர் சையின்ஸ் உள்ளிட்ட 11 பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், 11-ந் தேதி வேதியியல், கணக்கியல் மற்றும் மண்ணியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 15) இயற்பியல், வணிகவியல், கம்பியூட்டர் டென்னாலஜி உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
இதில் இயற்பியல் தேர்வு எழுதிய மாணவர்கள், வினாத்தாள் எப்படி இருந்தது என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி வினாத்தாளில், ஒரு மதிப்பெண் கொண்ட 15 வினாக்கள், எளிமையானது அல்லது கடுமையானது என்று சொல்வதற்கு இல்லாமல் நடுத்தரமாக இருந்தது. நன்றாக படித்தவர்கள் மட்டுமல்லாமல் நடுத்தரமாக படித்தவர்கள் கூட பதிலளிக்கும் வகையில் ஒரு மதிப்பெண் வினாக்கள் இருந்துள்ளது.
அடுத்ததாக 2 மதிப்பெண் கொண்ட 6 வினாக்களும், சற்று எளிமையாக இருந்தது. அதே சமயம் 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண்கள் கொண்ட வினாக்கள், நன்றாக படித்த மாணவர்களுக்கும் சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்துள்ளது. புத்தகத்தின் பின்னால் இருக்கும் கேள்விகள் அதிகம் கேட்கப்படாத நிலையில், மாணவர்கள் தாங்களாகவே சொந்த நடையில் பதில் எழுதும் வகையிலான கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.
அதேபோல் முந்தைய தேர்வுகளில் கொடுக்கப்பட்ட வினாத்தாள்களை வைத்து படித்த மாணவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. பெரிதாக புத்தகத்தின் பின்னால் இருந்தும், ரிவிஷன் செய்த பகுதிகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படால் மாணவர்கள் சொந்த நடையில் பதிலாளிக்கும் வகையிலான கேள்விகளால், நடுத்தரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல் வினாத்தாள் சற்று கடினமாக இருந்துள்ளது.
+ There are no comments
Add yours