ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில், சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேரலாம்.
இளநிலை பட்டப்படிப்புகளாக பிசியோதெரப்பி, ஆக்குபேஷனல் தெரப்பி, பார்மசி, நர்ஸிங் உள்ளிட்ட படிப்புகளையும், வேளாண் துறை சார்ந்த படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
இதில், அக்ரிகல்ச்சர், ஹர்டிகல்ச்சர், வேளாண் சார் புள்ளியியல் படிப்புகள் உள்ளன. மீன்வளம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளான இயற்பியல், வேதியியல், புள்ளியியல், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண்ணுயிரியியல் போன்ற படிப்புகளுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
இளநிலை கலைப் படிப்புகளாக, பொருளாதாரம், வணிகம், வணிகவியல் போன்ற படிப்புகளை அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். தற்போது ஏராளமான அரசு உறுப்புக் கல்லூரிகள் திறந்திருப்பதால் அதில் சேர்ந்து படிக்கலாம்.
கட்டணமும் குறைவு. அரசுப் பணித் தேர்வுகள் எழுத ஆர்வமுள்ளவர்கள், இளநிலைப் பட்டப்படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.
+ There are no comments
Add yours