ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேர்வு முகாமானது மே 11-ம் தேதி நடைபெறுகிறது.
இதில், டிரைவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நாளில் வயது 24-ல் இருந்து 35-க்குள் இருக்க வேண்டும்.
உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகனம் உரிமம் எடுத்து குறைந்தது மூன்று ஆண்டுகள், பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனித வளத்துறை நேர்காணல், கண்பார்வை திறன், மருத்துவ சம்பந்தமான தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு ஆகிய அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். மாத ஊதியமாக 15, 820 வழங்கப்படும்.
இதில் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கு, பிளஸ் 2 முடித்த பின் பி.எஸ்.சி.நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி படித்திருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பயிற்சி காலத்தில் தங்கும் வசதிகளும் உள்ளது. இதில் ஊதியமாக ரூ.16,020 வழங்கப்படும். மேலும், விவரங்கள் 044- 28888060 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளவும்.
+ There are no comments
Add yours