இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 15 ம் தேதி முதல் மே 14 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15 ஏப்ரல் முதல் 14 மே 2024 வரை ஆன்லைனில் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பம் ஆரம்பம்: 15/04/2024 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14/05/2024 ஆகும்.
மேலும், ஆன்லைனில் பணம் செலுத்த கடைசி தேதி 14/05/2024 ஆகும். ஏதேனும் திருத்தம் இருந்தால் மே 15-24க்குள் செய்ய வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
இதில், ஆண்களுக்கு ரூ.500ம், பெண்களுக்கு ரூ.250ம் விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours