இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் கூடுதலாக 1,000 பணியிடங்கள்.

Spread the love

சென்னை: இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்புில் கூறியிருப்பதாவது: 2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 26,510 பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours