மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கம் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், Musculoskeletal Unit-க்கு ஒரு ஆயுஷ் மருத்துவர், சிகிச்சை உதவியாளர்,பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்,மாவட்ட திட்ட அலுவலர் (Ayurveda), தகவல் உள்ளீட்டாளர் (Data Assistant) நகர்புற சுகாதார மேலாளர் (Urban Health Manager), இடை நிலை சுகாதார பணியாளர்(MLHP)/நகர நல வழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
இந்த காலியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிமாக பணிபுரிவதற்கு நிரப்பப்பட உள்ளது.
எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர் நாளைக்குள் (08.04.2024 மாலை 5 மணிக்குள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர்
சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம்-626001 ஆகும்.
விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (SpeedPost) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
+ There are no comments
Add yours