நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 490 இளநிலை நிர்வாகி (Junior Executive) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) வெளியிட்டுள்ளது.
இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் மே மாதம் 1ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிட விவரங்கள்:
Junior Executive (Architecture) – 03
Junior Executive (Engineering – civil ) – 90
Junior Executive (Engineering – Electrical) – 106
Junior Executive (Electronics) – 278
Junior Executive (Information Technology) – 13
தொடர்புடைய பாடங்களில், 2024ம் வருட கேட் தேர்வு மதிப்பெண் (GATE SCORE 2024) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அனைத்து பதவிகளுக்கும், இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள விவரம், கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. www.aai.aero என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 300 ஆகும். பட்டியல்/ பழங்குடியினர், பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours