காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர் (Junior Reporters) காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை Police Shorthand Bureau, SBCID Chennai வெளியிட்டு உள்ளது.
இதற்கான, விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (ஏப்ரல் 15ம் தேதி) முடிவடைய இருப்பதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிடங்கள் விவரம்: மொத்தம் 54 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. முக்கியமான நாட்கள்: இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 15.04.2024;
இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 04-05-2023; நள்ளிரவு 11 மணி வரை ஆகும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தமிழை ஒரு பாடமாக எடுத்து 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் முதுநிலை (Higher / Senior Grade in English ) முடித்திருக்க வேண்டும். கணினி அறிவு இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை eservices.tnpolice.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :
The Chairman, Selection Committee,
Police Shorthand Bureau
HQ, 2 nd floor,
Old Coastal Security Group Building,
DGP office complex
Mylapore,
Chennai- 600 004 ஆகும்.
விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 15.04.2024 ஆகும்.
+ There are no comments
Add yours