இந்திய ரயில்வே வாரியம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் துணை காவல் ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்) மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், இந்திய ரயில்வே வாரியத்தின் இணையதள பக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின் பணியிடங்களில் ஒருவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தவறுதலாக இரண்டு முறை விண்ணப்பம் செய்திருந்தால் அதில் ஒன்றிற்கான ஹால் டிக்கெட் தேதியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தளமான rpf.indianrailways.gov.in -க்கு செல்ல வேண்டும். அதில் தேவையான இடங்களை பூர்த்தி செய்து ஒருமுறை முழுவதுமாக சரிபார்த்த பின்னர் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 14 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆன்லைனில் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மொத்த பணி இடங்கள்
மொத்தம் உள்ள 4660 பணியிடங்களில் 4208 பணியிடங்கள் கான்ஸ்டபிள் பதவிக்கும், மீதமுள்ள 452 பணியிடங்கள் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கும் நிரப்பபடவுள்ளன.
தேர்வு கட்டணம்
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours