நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் பாளையங்கோட்டையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 7ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, உரைக்கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறைகுறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மேலும் ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
வயது வரம்பு இல்லை, கல்வி தகுதி தேவையில்லை. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.
மிகப்பெரிய நகை நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும் பணி புரியலாம். இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார் அட்டை, பயிற்சி கட்டணம் ரூபாய் 7700 ஆகியவற்றுடன் வரும் 7ம் தேதி ஞாயிறு பாளையங்கோட்டை தலைமை தபால் ஆபீஸ் தெருவில் உள்ள ரேடியன்ட் ஐஏஎஸ் அகாடமிக்கு நேரில் வரவேண்டும்என தெரிவிக்கப்பட்டு உள்ளது
+ There are no comments
Add yours