Executive Engineer பணிக்கென மத்தியப் புலனாய்வுத் துறையில் (CBI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
CBI காலிப்பணியிடங்கள்:
Executive Engineer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே மத்தியப் புலனாய்வுத் துறையில் (CBI) காலியாக உள்ளது.
Executive Engineer கல்வி தகுதி:
இந்த மத்தியப் புலனாய்வுத் துறை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த பொறியியல் கல்வி வாரியங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Executive Engineer அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Assistant Executive Engineer, Assistant Engineer பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Executive Engineer வயது வரம்பு:
Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
Executive Engineer மாத சம்பளம்:
இந்த மத்தியப் புலனாய்வுத் துறை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
CBI தேர்வு முறை:
Executive Engineer பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
CBI விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்தியப் புலனாய்வுத் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 14.05.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
+ There are no comments
Add yours