தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை செய்தியாளர் (Junior Reporters) காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகி உள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மொத்தம் 54 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 15.04.2024 ஆகும்.
மேலும், இதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 04-05-2024 நள்ளிரவு 11 மணி ஆகும். இது இணைய வழி கட்டணம் செலுத்தும் நபர்களுக்கு பொருந்தும்.
இதற்கான தேர்வு தேதி மற்றும் நேர்க்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையும், பி.சி. பிரிவினர் 34 வயது வரையும், பிசிஎம் பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்புக்குள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். கணினி அறிவும் கட்டாயம் அவசியம். இதற்கான விண்ணப்பப்படிவத்தை eservices.tnpolice.gov.in / என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி : The Chairman, Selection Committee,
Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004 எனற முகவரிக்கு 15-04-2024க்குள் அனுப்ப வேண்டும்.
+ There are no comments
Add yours