சென்னை உயர் நீதிமன்றத்தில் 74 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Spread the love

புதுச்சேரி நீதித்துறை சேவையில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் குரூப் சி பிரிவில் உள்ள முதுநிலை சுருக்கெழுத்தாளர், குரூப் ‘பி’ பிரிவில் உள்ள இளநிலை சுருக்கெழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இளநிலை எழுத்தாளர், வாகன ஓட்டுநர்,தட்டச்சர், பல்துறை பணியாளர் (Multi Tasking staff) ஆகிய பதவிகள் நிரப்பப்படுகின்றன.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படாது என்றும் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2024 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவார்கள்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். மேலும், விண்ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் ( https://www.mhc.tn.gov.in ) தேர்வு சம்மந்தமான அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours