தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ளது . ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் எதிர்வரும் ஏப்ரல் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத அனைத்து பணிநாடுநர்களுக்கும் சார்ந்த பாடங்களில் 55% மதிப்பெண்கள் முதுகலைப்பட்டயப்படிப்பில் பெற்றிருக்கவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாற்றுத் திறனாளிகளுக்கு சார்ந்த பாடங்களில் 50% மதிப்பெண்கள் முதுகலைப்பட்டயப்படிப்பில் பெற்றிருக்கவேண்டும்.
பல்கலைக்கழக மான்யத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட கீழ்க்காணும் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (UGC/CSIR/JRF/NET/SLET/SLST).
பல்கலைக்கழக மான்யத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட கீழ்க்காணும் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (UGC/CSIR/JRF/NET/SLET/SLST).
இந்த நான்காயிரம் (4000) உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, உத்தேசமாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
+ There are no comments
Add yours