அரசு மருத்துவமனையில் குவாலிட்டி மேனேஜர் பணி; எப்படி விண்ணப்பிப்பது?

Spread the love

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Quality Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master in Hospital Administration தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.06.2024ம் தேதி மாலை 5 மணிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours