கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ள மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் உபகோயிலில் உள்ள வெளித்துறை மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், விடுதி காப்பாளர், மின் உதவியாளர் உள்ளிட்ட பலவேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணிக்கு, 18,500 முதல் 58, 600 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு, 15,900 முதல் 50,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல் ஓட்டுநர், பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் பணிக்கு 18,000 முதல் 56,900 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
அதேபோல் ஓட்டுநர் பணிக்கு 18,500 முதல் 58,600 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. காவலர் பணிக்கு, 15,900 முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தமிழில் படிக்க மற்றும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மொத்தம் 4 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
+ There are no comments
Add yours