மாதம் ரூ.92 ஆயிரம் வரை சம்பளம். இந்த பணி தெரியுமா?

Spread the love

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஆனது மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CTCRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Assistant பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.29,200/- முதல் ரூ.92,300/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 31.05.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours