UIDAI ஆதார் ஆணையத்தில் வேலை: உடனே விண்ணப்பிங்க

Spread the love

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Section Officer, Assistant Account Officer பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 6 மற்றும் 8 அளவில் ரூ.35,400/- முதல் ரூ.1,51,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி 13.06.2024 ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours