டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்காவில் ஒரு சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் “இனம் மற்றும் வயதின் அடிப்படையில் சட்டவிரோதமாக பாகுபாடு காட்டுவதாகவும், அவர்களை பணிநீக்கம் செய்ததாகவும், அவர்களின் சில வேலைகளை தற்காலிக வேலை விசாக்களில் குறைந்த ஊதியம் பெறும் இந்திய குடியேறியவர்களுக்கு மாற்றியதாகவும்” புகார் எழுந்துள்ளது.
தி வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் அறிக்கையில், டி.சி.எஸ் தொழில்நுட்ப நிறுவனமானது குறுகிய அறிவிப்பின் பேரில் அவர்களை பணிநீக்கம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்டு அவர்களின் பல வேலையிடங்களை நிரப்புவதாகவும் அனுபவம் வாய்ந்த அமெரிக்க வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறைந்தபட்சம் 22 தொழிலாளர்கள் TCS க்கு எதிராக சமமான வேலை வாய்ப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர் என்று அறிக்கை கூறியுள்ளது.
இந்த நிலையில், டி.சி.எஸ் செய்தித் தொடர்பாளர் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையிடம், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், டி.சி.எஸ் அமெரிக்காவில் சம வாய்ப்புள்ள நிறுவனமாக இருந்த வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.
+ There are no comments
Add yours