சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Additional General Manager (Rolling Stock)/ Joint General Manager (Rolling Stock)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.E / B. Tech (ECE/EEE/Mech) படித்திருக்க வேண்டும். மற்றும் 17 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 1,45,000 – 1,60,000 ஆகும்.
Joint General Manager (Power System & OverHead Equipment)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B. Tech (EEE) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,45,000
Manager (Operations)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B. E / B.Tech (EEE/ ECE/ Mech/CSC) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 85,000 ஆகும்.
Deputy Manager /Assistant Manager (Rolling Stock)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.E / B. Tech (ECE/EEE/Mech) படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 75,000
Assistant Manager (General Consultant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 62,000 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2024 ஆகும். இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடவும்.
+ There are no comments
Add yours