வாழைப்பழத்திற்காக ஐஃபோனை பிடுங்கிய குரங்கு !

Spread the love

உத்திர பிரதேசத்தில் கோவில் ஒன்றில் பெண் ஒருவரின் செல்போனை பிடுங்கிச் சென்ற குரங்கு, போனை திரும்ப தர வேண்டும் என்றால் வாழைப்பழங்கள் வேண்டும் என்று அடம்பிடித்து பழங்களை வாங்கிய பின்னர் செல்போனை திருப்பிக் கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரங்கநாதர் ஜி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தனிப்பட்ட பொருட்களை அவர்களிடம் இருந்து பறித்துச் செல்லும் குரங்குகள், அவர்களிடம் இருந்து ஏதாவது வாங்கிய பிறகு அந்த பொருளை திருப்பி கொடுக்கின்றனர்.

அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில்,

ஒரு கட்டிடத்தின் உயரத்தில் இரண்டு குரங்குகள் அமர்ந்து உள்ளன. அதில் ஒரு குரங்கின் கையில் விலை உயர்ந்த ஐபோன் உள்ளது.

அந்த ஐபோனை திரும்ப வாங்குவதற்காக செல்போனை பறிகொடுத்த பெண் உரிமையாளர் கீழே காத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சுற்றியும் மக்கள் பலர் திரளாக கூடி நிற்கின்றனர்.

அவர்கள் அந்த குரங்கிடம் இருந்து ஐபோனை வாங்குவதற்கான முயற்சியில் இருக்கின்றனர். அப்போது அவர்கள் ஏதேதோ செய்து பார்த்தும் அந்த குரங்கு ஐபோனை திரும்பத் தரவில்லை.

இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல் அந்த குரங்கு அமர்ந்திருந்தது. இதனால் நீண்ட நேரமாகியும் அந்த ஐபோனை குரங்கிடம் இருந்து திரும்ப பெற முடியவில்லை.

கடைசியாக ஐபோனை பரி கொடுத்த பெண் இரண்டு வாழைப்பழங்களை எடுத்து வந்து அந்த குரங்கை நோக்கி வீசினார். அதனை சரியாக கையில் பிடித்த குரங்கு அதன் பின்னர் அந்த ஐபோனை அவரிடம் தூக்கி போட்டது.

இதனை தரையில் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நல்ல வேளையாக பிடித்து விட்டார்.

இந்த வீடியோவை 6.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். குரங்குகள் செல்போன்களை திருடுவதற்கு கற்று கொண்டு விட்டன. அவை பெரிய புத்திசாலியாகி விட்டன என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், ஒரு சிலர் உணவுக்காகவே குரங்குகள் இவ்வாறு திருடுகின்றன என்றும் பதிவிட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு, பாலியில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது.

அதில், பெண் ஒருவரின் செல்போனை திருப்பி தருவதற்கு அந்த பெண் இரண்டு பழங்களை வழங்கிய பின்னரே, செல்போன் அவருக்கு கிடைத்திருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours