நாம் தொடர்ந்து அதிக சர்க்கரை சாப்பிட்டால், கல்லீரல் என்ன ஆகும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். நமது உடல் கொழுப்பு சத்து மற்றும் புரத சத்தை கொழுப்பாக அல்லது ஸ்டார்ச் ஆக மாற்றும். நாம் சாப்பிடும்போது அது அதிகமாக இருந்தால், இவை கொழுப்பாக நமது உடலில் தேக்கி வைக்கப்படும். நாம் எடுத்துகொள்ளும் சர்க்கரை அல்லது ஸ்வீட் குளுக்கோஸாக மாறும்.
இதில் குறைந்த சதவிகிதம் மட்டுமே உடல் உழைப்புக்கு தேவைப்படும். இதில் அதிகபடியானவை கொழுப்பு சத்தாக மாறும். நாம் உடல் பயிற்சி செய்யாமல் வாழ்ந்தால், கொழுப்பு இன்னும் அதிகமாகும். நாம் அதிகமாக சர்க்க்ரை எடுத்துகொண்டால், உடல் எடை அதிகரிக்கும். இவை நாம் கல்லீரலை பாதிக்கும் இதனால் பேட்டி லிவர் ஏற்படலாம். இதனால் நமக்கு குடிபழக்கம் இல்லாத பேட்டி லிவர் ஏற்படும்.
சர்க்க்ரை அதிகம் சாப்பிட்டல், டோபமைன் என்பது சுரக்கும். மனச்சோர்வாக அல்லது மன் ஆழுத்தத்தில் இருந்தால், இனிப்பாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். நாம் இனிப்பாக சாப்பிடும் எல்லாம் கொழுப்பாக மாறி கல்லீரை பாதிக்கும்.
இதுபோல அதிகபடியான சர்க்கரை பொருட்கள் சாப்பிட்டால், குடலில் உள்ள நல்ல பேக்டீரியா பாதிக்கப்படும். இவை குடல் புற்றுநோயாக கூட மாறலாம்.
பழங்களில் உள்ள ஸ்வீட் ப்ரொக்ட்டோஸ் அதிகமாக இருக்கலாம். குறிப்பாக கிரேப்ஸ், ஆரஞ்சு, தர்பூசணி அதிக ப்ரெக்டோஸ் உள்ளது. இது கொய்யா, ஆப்பிள், கிவியில் குறைவாக உள்ளது.
இந்நிலையில் நமக்கு தெரியாமல் சில உணவுகளில் சர்க்க்ரை உள்ளது. கெச்சப், யோகர்ட், சீரியல், ஓட்ஸ், பூஸ்ட், போன்வீட்டா, ஹார்லிக்ஸ், பீநெட் பட்டர், மில்க் பிரட், பிஸ்கட்டில் உள்ளிட்டவற்றில் சர்க்க்ரை அதிகமாக உள்ளது.
நாம் இந்த பேட்டி லிவர் ஏற்படாமல் இருக்க, அதிக உடல் பயிற்சி செய்ய வேண்டும். குறைந்த கார்போஹைட்ரேட் உடைய உணவுகள், அதிக நார்சத்து உள்ள உணவுகள், ஸ்வீட், ரெட் மீட் ஆகியவை நமது கல்லீரலை பாதிக்கலாம். சரியான உடல் எடையில் நாம் இருக்க வேண்டும்.
+ There are no comments
Add yours