ஒவ்வொரு பெண்ணும் நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலை வளர்க்க விரும்புவார்கள்.. ஆரோக்கியமான பளபளப்பான கூந்தல் இருந்தால் தானாக அழகாக இருப்பீர்கள் என்று நம் முன்னோர்கள் சொல்லிவதுண்டு.. ஆனால், நாளுக்கு நாள் வாழ்க்கைத் தரம் மாறி வருகின்றது..
அதனால் மாசு நிறைந்த நச்சுச் சூழலில், நாம் வாழ்கிறோம். அதில் உண்மையில் நம் தலைமுடியைப் பற்றி சிந்திக்கிறோமா? கண்டிப்பாக இல்லை.. முடியின் தரத்தை சேமிப்பதற்கான முதல் மற்றும் முக்கிய படி வாழ்க்கை முறையை மாற்றுவதாகும். நம் முடியை காப்பாற்ற இந்த ஒரு உருளைக்கிழங்கு போதும் எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க
உருளைக்கிழங்கு என்பது அனைவரின் உணவு முறையின் அடிப்படை பகுதியாகும், மேலும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு சமையலறையிலும் இதை காணலாம்.. இது மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். சத்தான உணவுகளில் நான்காவது இடம் உருளைக்கிழங்குக்கு உண்டு. உருளைக்கிழங்குக்கு முன், அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆகியவை உலக உணவின் முக்கிய அங்கமாக இருந்தன. அழகு குறிப்புகளுக்கு உருளைக்கிழங்கு பயன்படுகிறது தெரியுமா? ஆனால் அது உண்மைதான். உருளைக்கிழங்கை அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தலாம். அது எப்படி தெரியுமா?
- ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தண்ணீரை பிழியவும். அதில் முட்டை மற்றும் தயிர் கலக்கவும். பின்னர் ஒரு நல்ல பேக் செய்து முடி முழுவதும் அப்ளை பண்னவும்.. 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீர் மற்றும் சாதாரண ஷாம்பூவுடன் கழுவவும். இதை 20 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர வேண்டும்.. இந்த பேக் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியை அளிக்கிறது
- உருளைக்கிழங்கை முதலில் உரிக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உருளைக்கிழங்குத் தோல்களைச் சேர்த்து 20 நிமிடம் கொதிக்கவிடவும். இப்போது இந்த தண்ணீரை ஏதேனும் பாத்திரத்தில் வடிகட்டவும். சாதாரண ஷாம்பூவுடன் முடியைக் கழுவிய பின், வேகவைத்த மற்றும் வடிகட்டிய நீரில் கழுவவும். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கருப்பு நிறத்தை கொடுக்க உதவுகிறது. நரை முடிக்கு இது ஒரு நல்ல மற்றும் இயற்கையான சிகிச்சையாகும்.
- முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் பிரச்சனையை தீர்க்க வீட்டிலேயே செய்ய வேண்டிய அழகு செய்முறையை உங்களுக்கு சொல்கிறோம் வாங்க.. உருளைக்கிழங்கு சாறு மூன்று ஸ்பூன், கற்றாழை சாறு மூன்று ஸ்பூன், தேன் இரண்டு ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து. இந்த கலவையை உச்சந்தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து வழக்கமான ஷாம்பு கொண்டு கழுவவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
+ There are no comments
Add yours