இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், 18 முதல் 54 வயதில் இருக்கும் நபர்கள் 30 % பேர் ஒரு முறைகூட ரத்த அழுத்தத்தை சோதனை செய்ததே இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரத்த அழுத்தத்தால், இதய நோய், பக்கவாதம் வரை ஏற்படலாம்.
தென்னிந்திய மாநிலங்களில் 76% பேர் ரத்த அழுத்தத்தை சோதனை செய்கின்றனர். ஆனால் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட், குஜராத், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்த அளவிலேயே ரத்த அழுத்தத்தை சோதிக்கின்றனர்.
நாம் ரத்த அழுத்தத்தை முன்பே பரிசோதனை செய்தால், அதிக ரத்த அழுத்தம், இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய்களை நாம் முன்பே கண்டறியலாம். சமந்தபட்ட நபருக்கு சர்க்கரை நோய், உடல் பருமன் இருந்தாலோ, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இதய நோய் இருந்தால், அவர்கள் அடிக்கடி ரத்த அழுத்தத்தை சோதனை செய்ய வேண்டும்.
ரத்த அழுத்தத்தை நாம் சோதனை செய்ய டிஜிட்டல் மீட்டரை நாம் மருந்து கடையில் இருந்து வாங்கலாம். இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ய வேண்டும்.
+ There are no comments
Add yours