ஆஸ்துமா உலகில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். ஒருவருக்கு ஆஸ்துமா இருந்தால், அவர்களது சுவாசக் கருவியின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், நமது வாழ்க்கை முறை, உணவுகள் மற்றும் பிற காரணிகளால் கட்டுப்படுத்த முடியும்..
அதிலும் மழைக் காலம், குளிர் காலத்தில் ஆஸ்துமா, வீசிங் தொல்லை அதிகமாக இருக்கும். தாய்மார்களும் கர்ப்பிணிகள்கூட இதனால் அவதிப்படலாம். உணவுகள் மூலமாகவே வீசிங், ஆஸ்துமாவை விரட்டுவது எப்படி என இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க..
சில உணவுகள் மழைக்காலங்களில் ஆஸ்துமா அறிகுறிகளை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர்ஃபுட்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. இந்தக் கட்டுரையில், உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், இந்த மழைக்காலத்தில் உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர்ஃபுட்கள் என்னென்ன? சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன? என்ற லிஸ்டை தெரிந்துக் கொள்ளலாம்..
நீர்க்காய்கறிகள் அனைத்தும் தர்பூசணி, குளிர்பானம், செயற்கை பழச்சாறுகள் மில்க் ஸ்வீட், சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகள் எதுவும் வேண்டாம். சாக்லெட் கண்டிப்பாக சாப்பிடாதீர்கள். குழந்தைகளுக்கு டார்க் சாக்லெட்கள் இருந்தால் கொடுக்கலாம்.
புளி, உருளைக்கிழங்கு, மூக்கடலை (கொண்டைக்கடலை) துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி குளிர்பானங்கள் கமலா, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மருந்து எடுக்கும் காலத்தில் தவிர்க்கலாம். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவு உணவுகளை தவிர்க்கவும். இது வாயுவைத் தரும். மூட்டுவலி மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சிவப்பரிசி அவல் உணவுகள் – உப்புமா, கஞ்சி, அளவுடன் இனிப்பு சேர்த்த கீர் முருங்கை கீரை பொரியல் மற்றும் சாம்பார் புழுங்கல் அரிசி கஞ்சி மற்றும் துவையல் மிளகு ரசம், திப்பிலி ரசம், தூதுவளை ரசம், பைன் ஆப்பிள் ரசம் ஆகியவை சாப்பிடலாம். முசுமுசுக்கை இலைகள் சேர்த்த அடை சாப்பிடுவது நல்லது.
மிளகு, திப்பிலி, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை, கற்பூரவல்லி, சுக்கு காபி, பூண்டு, இஞ்சி, நெல்லிக்காய், சோளம், தயிர், சமைத்த காய்கறிகள் ஆகிவற்றை மழைக்காலத்தில் சாப்பிடலாம்.. இவை அனைத்திலும் நோயெதிர்ப்பு அமைப்பு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் B6, ஃபோலிக் அமிலம், துத்தநாகம் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் இருப்பைப் பெரிதும் சார்ந்துள்ளது. முக்கியமாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. அதனால் நோயெதிர்ப்பு பண்புகள் வலுவாக இருக்கும்..
முடிவில், சில சூப்பர்ஃபுட்கள் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். இது தவிர, பரிந்துரைக்கப்பட்ட எந்த மருந்துகளையும் தவறாமல் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்கும் உணவுகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
+ There are no comments
Add yours