அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 19 அடி உயர அண்ணல் அம்பேத்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது
இந்தியாவின் சட்ட மேதை என்று அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழை பற்றி ஒற்றை வரிகளில் சொல்லிவிட முடியாது . அனைவர்க்கும் அனைத்தும் வேண்டும் என்று அப்போதே சமூக நீதிக்காக குரல் கொடுத்த இவருக்கு அமெரிக்காவில் தற்போது சிலை வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 19 அடி உயர திருவுருவ சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான அம்பேத்கர் சிலை இதுவாகும். சர்தார் படேலின் சிலையை செதுக்கிய சிற்பி ராம் சுதார் தான் இந்த சிலையையும் உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் அம்பேத்கரின் மிக பெரிய சிலையை திறக்கப்பட்ட போது அங்கே சூழ்ந்திருந்த மக்கள் ‘ஜெய்பீம்’ என கோஷமிட்டு கொண்டாடிய வீடியோவும் செம வைரல் ஆக வலம் வருகிறது.
+ There are no comments
Add yours