‘இந்தியப் பெருங்கடல் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கும் சொந்தமானது அல்ல’ – மாலத்தீவு அதிபர்!

Spread the love

சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு 5 நாட்கள் பயணமாக சீனா சென்றார். சுற்றுலாப் பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்ப வேண்டும் என சீன அரசுக்கு கோரிக்கை விடுத்த முய்ஸு, சீனாவும் மாலத்தீவும் நெருங்கிய நண்பர்கள் என உறுதிப்படுத்தினார். மேலும் தொழில் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார். இந்நிலையில் முகமது முய்ஸு நேற்று மாலத்தீவு திரும்பினார். சீனாவில் இருந்து திரும்பிய கையோடு இந்தியாவை சீண்டியுள்ளர் முய்ஸு.

அதா இந்திய பெருங்கடல் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லை என இந்தியாவை மறைமுகமாக சீண்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது எங்களை கொடுமைப்படுத்துவதற்கான உரிமத்தை உங்களுக்கு வழங்காது. நாங்கள் சுதந்திரமானவர்கள். இந்தியப் பெருங்கடல் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கும் சொந்தமானது அல்ல.

மாலத்தீவு கடலின் மிகப்பெரிய பங்குகளில் ஒன்றாகும். இந்தப் பெருங்கடலில் சிறிய தீவுகள் இருந்தாலும், 9,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலம் உள்ளது. இந்திய பெருங்கடலின் பெரும் பங்கைக் கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தப் பெருங்கடல், அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது என காட்டமாக தெரிவித்துள்ளார் முய்ஸு.

மேலும் மாலத்தீவு இந்தியாவின் கொல்லைப்புறத்தில் உள்ளது போன்ற கருத்துகள் குறித்து கேட்டதற்கு கடுமையாக பதில் அளித்துள்ளார் முய்ஸு. அதாவது, நாங்கள் யாருடைய கொல்லைப்புறத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் மாலைதீவு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்றும் தெரிவித்தார்.

மாலத்தீவு-சீனா உறவுகள் “தலையிடாத” கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறிய முய்ஸு, முந்தைய மாலத்தீவு அரசையும் கேலி செய்தார். மாலத்தீவின் முந்தைய அரசாங்கம் “ஒரு நாற்காலியில் இருந்து எழுந்து மற்றொரு நாற்காலியில் உட்காருவதற்கு ஒரு வெளிநாட்டிடம் அனுமதி வாங்கியது” என்றும் விமர்சித்தார். சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் முய்ஸு, IndiaOut என்ற பிரச்சாரத்தின் ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours