கனடாவில் வாழும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. “இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாலும், கனடாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் கனடா செல்ல திட்டமிட்டு இருக்கும் பயணிகளும் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இந்தியா மற்றும் கனடா இடையேயான விரிசல் அதிகரித்து வந்ததே இதற்கு காரணம் ஆகும். அதன்படி, இந்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கும். காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளில் ஒன்றாக காலிஸ்தான் புலிப்படை அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதியாத அறிவித்தது. எனினும், இவர் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.
+ There are no comments
Add yours