இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

Spread the love

இந்தோனேசியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா நாட்டின் தலாவத் தீவு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.

அதிகாலை ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படாமல் உள்ளது .

இதையடுத்து பப்புவா நியூ கினியாவின் வடகடலோர பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது.

இந்த இரண்டு நில நடுக்கங்களை போல் பிலிப்பைன்ஸிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான சாரங்கனிக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ தொலைவில் தாக்கியது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. அதி சக்தி வாந்தி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையிலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சமீப காலமாக இந்தியாவின் அருகில் உள்ள பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது தொடர் கதை ஆகி வருகிறது .

இதனால் யாருக்கு எப்போது என்ன ஆக போகிறதோ என்ற அச்சம் அனைவரது மனதிலும் எழுகிறது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் சுமார் 150கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பல அப்பாவி உயிர்கள் உயிரிழந்த நிலையில் ஜப்பானில் நிறுவப்பட்ட பிம்மண்ட கட்டிடங்கள் பல கடுமையாக சேதமடைந்துள்ளன.

பல பள்ளி கல்லூரி கட்டிடங்கள் மருத்துவனையில் பல அரசு காட்டுங்கள் உள்பட பல அசம்பாவிதங்கள் ஒரு சேர்ந்து ஜப்பான் நாட்டை ஒரு புரட்டி போட்டு விட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஜப்பான் நாட்டில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது ஆனால் நினைத்த அளவுக்கு அதுபோன்ற இந்தத் வித சம்பவங்களும் நிகழாமல் இருந்தது சற்று ஆறுதலை தருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours