உளவு பார்ப்பு காரணமாக 18 செயலிகளை நீக்கியது பிளே ஸ்டோர்!

Spread the love

பல லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் 18 செயலிகள், உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை கூகுள் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.

இஎஸ்இடி அறிக்கையின்படி, கடந்த ஓராண்டு முழுக்க கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த இந்த 18 செயலிகளும், பெரிய அளவில் உளவுபார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகளை திருடியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவு கடன் செயலிகள் மூலம் தகவல்களை திருடும் செயலிகள், அதன் மூலம் கடன் பெறுவோரிடமிருந்து அதிக வட்டிக் கேட்டு மிரட்டி, புகைப்படங்களை, செல்ஃபோனிலிருக்கும் கான்டாக்ட் எண்களுக்கு அனுப்புவோம் என்பது போன்ற மிரட்டல்களை விடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஎஸ்இடி ஆய்வின்படி, இவை கடன் கொடுக்கும் செயலிகளாக அறிமுகமாகி, மிரட்டல் செயலிகளாக மாறுவதாகக் கூறப்படுகிறது. இது பெரும்பாலும், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குறிவைத்தே இயக்கப்படுகின்றனவாம். இதில் 17 செயலிகள் முற்றிலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஒன்று மட்டும் புதிய அப்டேட்டுகளுடன் இந்த உளவு பார்க்கும் வசதி இல்லாமல் வந்துள்ளதால் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த செயலிகளை யாரேனும் பதிவிறக்கம் செய்திருந்தால் அவற்றை அவர்களே தாங்களாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. அதில் ஏஏ கிரெடிட், அமோர் கேஷ், ஈஸி கிரெடிட், காஷ்வாவ், கிரெடிபஸ், பிளாஷ்லோன், கோ கிரெடிடோ, பின்னப் லென்டிங், 4எஸ் கேஷ், ட்ரூநய்ரா, ஈஸி கேஷ் உள்ளிட்ட செயலிகளும் அடங்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours