காசாவில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை கொண்டுவர கடுமையாக முயற்சித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் காசா நகரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம். தற்போது காசா பகுதி பாலஸ்தீனத்தின் ஆதரவுள்ள ஹமாஸ் அமைப்பிடம் இருக்கிறது. இந்த பகுதியை கைப்பற்றவேண்டும் என இஸ்ரேல், அமெரிக்காவின் உதவியுடன் முயற்சித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போரினால் லட்ச கணக்கில் காசா மக்கள் அகதிளாகியுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் எதுவும் இன்றி போராலும் பட்டினியாலும் பலியாகின்றனர். இந்த மக்களுக்கு உலக நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்காவும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது.
இந்தநிலையில், இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் காசா மக்களுக்கு தேவையான உதவிகளை உலகளவில் இருந்து பெற அமெரிக்கா வழிவகை செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், காசாவில் 20 லட்சம் பாலஸ்தீனர்கள் உணவு, குடிநீரின்றி தவித்து வருவது ரமலான் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, காசாவில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை கொண்டுவர கடுமையாக முயற்சித்து வருவதாகவும் பைடன் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours