ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

Spread the love

ஜப்பானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று, ஜப்பானின் மேற்கு கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் 202 பேர் உயிரிழந்தார். மேலும் 565 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து கடந்த செவ்வாயன்று ஜப்பான் கடலோரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் இன்று,

மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 மாக பதிவாகி உள்ளது.

மிக மோசமான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல அடுக்குமாடி வீடுகளும், தனி வீடுகளும் இடிந்து விழுந்தன.

மேலும் சாலைகளில் பிளவு ஏற்பட்டு, பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதுதவிர மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி சுமார் 70 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அணை ஒன்று உடையக்கூடிய அபாயம் உள்ளதாக கூறப்பட்டதையடுத்து அருகில் இருந்து மட்டும் சுமார் 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குமாமோட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 276 பேர் கொல்லப்பட்டனர்.

அதற்கு பிறகு, ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கம் இதுவாகும்.

கடந்த வாரம் ஏற்பட்ட அந்த மிகப்பெரும் நிலநடுக்கத்தால் முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட நாடு முழுவதும் பல முக்கிய வழித்தடங்கள் செயல்படவில்லை.

அதனால், நிவாரணப் பொருட்களை வழங்குவதில் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஜப்பானில் பதிவாகியுள்ளது. ஆனால், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

பசிபிக் பெருங் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

கால நிலை மாற்றல் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் காரணமாக ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours