தடை செய்யப்பட்ட ஆயுதம்… இஸ்ரேல் மீது பாலஸ்தீன பரபரப்பு குற்றச்சாட்டு!

Spread the love

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே யுத்தம் இன்று 6 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனம் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், சர்வதேச அளவில் தடை செய்த போர் ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துகிறது. காலனித்துவ மனப்பான்மையோடு போராளிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

அல் – சாவியா நகரத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். போராளிகளை தாக்குவதாக இஸ்ரேல் கூறும் நிலையில், அப்பாவி பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே, தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி பலமுனை தாக்குதலில் இஸ்ரேல் படை ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரினால் லெபனான் நாடு முழுவதும் பதற்றமான சூழலில் உள்ளது.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என இஸ்ரேல் குற்றசாட்டியுள்ளது. பணய கைதிகளை மீட்டெடுக்கும்பட்சத்தில் போரின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 பாலஸ்தீன குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றசாட்டியுள்ளது. காசா நகரில் குண்டுகள் வீசி நடத்தப்படும் தாக்குதலில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours