பிணைக்கைதிகளை இஸ்ரேல் ராணுவமே கொன்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் தவறுதலாக பிணைக்கைதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காஸா முனையில் இஸ்ரேலிய படைகள் பிணைக்கைதிளை பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் அச்சுறுத்தல்காரர்கள் என தவறுதலாக நினைத்து மூன்று பிணைக்கைதிகளை கொலை செய்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். பிணைக்கைதிகளை இஸ்ரேல் ராணுவமே கொன்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிணைக்கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாங்க முடியாத சோகம். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். இஸ்ரேல் ராணுவத்தினரின் இந்த செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours