இங்கிலாந்து நாட்டின் பிரபல கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் பாபி சார்ல்டன் இன்று காலமானார். அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டின் பிரபல கால்பந்து வீரரான பாபி சார்ல்டன் இன்று காலை காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவருக்கு வயது 86.
1966 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெல்வதற்கு சார்ல்டன் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமானவராக சார்ல்டன் இருந்து வந்தார். மேன்செஸ்டர் யூனைடெட் கிளப் அணிக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முதன்முறையாக அந்த அணி ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் தொடரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்.
கடந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற மூனிச் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சார்ல்டன், அடுத்தடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். அவரது மறைவிற்கு, ஃபிஃபா, ஐரோப்பிய கால்பந்து யூனியன், உள்ளிட்ட சர்வதேச கால்பந்து அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
+ There are no comments
Add yours