காஸாவில் உள்ள அல் அலி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 12வது நாளாக தொடர்கிறது. இதனால் இருதரப்பிலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு காசாவில் தாக்குதல் நடத்துவதற்காக மக்களை தெற்கு காசாவுக்கு இடம்பெயரும் படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியது. இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காசாவில் அடைக்கலம் புகுந்தனர்.
இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் தெற்கு காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது. அங்குள்ள ரபா, கான்யூனிஸ் ஆகிய இடங்களில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. அதில், அல் அலி என்ற மருத்துவமனை மீதும் தாக்குல் நடத்தியது.
தாக்குதலுக்கு பயந்து காஸா மக்கள் ஏராளமானோர் அந்த மருத்துவமனையில் தஞ்சம் அடைந்திருந்தனர். இந்த சூழலில் மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டு வீசியதை அடுத்து 500 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் கொடூர தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
500க்கும் மேற்பட்டோர் கொல்லபட்ட சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்க தினம் கடைபிடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இன்று வருகை தர உள்ளார்.
தற்போதைய இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஜோ பைடனுடனான சந்திப்பை ரத்து செய்வதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
+ There are no comments
Add yours