வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் மகன்கள் விடுதலை!

Spread the love

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் 2 மகன்களும், தங்களுக்கு எதிரான 3 ஊழல் வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், தன் மீதான ஊழல் வழக்கில் இருந்து முன்னதாக விடுதலையானார். அதனை முன்னுதாரணமக்கி அவரது 2 மகன்களும் தங்களுக்கு எதிரான 3 ஊழல் வழக்குகளில் இருந்து இன்று வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் எதிர்கொண்ட சட்டச் சிக்கல்களுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பனாமா ஆவணங்கள் தொடர்பான அவென்ஃபீல்ட், ஃபிளாக்ஷிப் மற்றும் அல்-அஜிசியா ஊழல் வழக்குகளில் நவாஸின் மகன்களான ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ் ஆகியோர் சிக்கினார்கள்.

பின்னர் அவை தொடர்பான வழக்கு விசரணைகளில், அப்போது வெளிநாட்டிலிருந்த இருவரும் ஆஜராகத் தவறியதால், அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அவர்களின் தந்தை நவாஸ் ஷெரீப், மொத்தமுள்ள 3 ஊழல் வழக்குகளில் ஒன்றில் விடுவிக்கப்பட்டார். எனினும் ஏனைய இரண்டில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.

கடந்த அக்டோபரில் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பியதை அடுத்து, தன் மீது தண்டனை விதித்த 2 ஊழல் வழக்குகளுக்கு எதிராக மனு தொடுத்தார். இரண்டிலும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இதே தீர்ப்பு லண்டனில் இருந்து அவரது மகன்களை பாகிஸ்தான் திரும்ப காரணமானது. ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான நவாஸ் ஷெரீப் விடுதலையானதை சுட்டிக்காட்டி, தங்களையும் விடுவிக்கக்கோரி 2 மகன்களும் வழக்கு தொடுத்தனர். இந்த கோரிக்கையை விசாரித்த நீதிபதி நசீர் ஜாவேத் ராணா, நவாஸ் மகன்கள் 3 பேரையும் விடுவித்து இன்றைய தினம் உத்தரவிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours