நைஜிரியா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் வெளியான தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காணாமல் போனவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று 100 பேர் படகில் பயணம் மேற்கொண்டனர். அண்டை நகரில் விவசாய பணிக்காக இவர்கள் படகில் பயணம் செய்தனர்.
அப்போது அவர்கள் சென்றுக் கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் சிக்கித் தவித்த 30 பேரை உயிருடன் மீட்டனர்.
இந்த படகு விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமான நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது அந்த நாட்டில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours