4-வது முறையாக தொடர்ந்து  நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா!

Spread the love

பிரதான எதிர்க்கட்சியின் பொது வேலைநிறுத்தத்துக்கான அழைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில்தொடர்ந்து 4-வது முறையாக நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனாவை தேர்வு செய்யும்பங்களாதேஷின் 12-வதுபொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா 2008-ம் ஆண்டு முதல் பங்களாதேஷின் பிரதமராக இருந்து வருகிறார்இன்றுவாக்குப்பதிவு நடைபெறும் பொதுத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பிபொதுவேலை நிறுத்தத்தின் வாயிலாக புறக்கணிப்பதால்ஷேக் ஹசீனா நான்காவது முறையாக வெற்றி பெறத்தயாராக உள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் உள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலானபிஎன்பி தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்ததுநேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய நாடு தழுவிய 48 மணிநேர பொது வேலைநிறுத்தத்திற்கு அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ’சட்டவிரோத அரசு ராஜினாமா செய்யவேண்டும்கட்சி சார்பற்ற நடுநிலை அரசை நிறுவ வேண்டும்அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும்செயல்வீரர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தவேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக பிஎன்பி தெரிவித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் அங்கு நடந்தேறிவருகின்றனபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு மையங்களாக நியமிக்கப்பட்ட 5 பள்ளிகள்தீக்கிரையாக்கப்பட்டுள்ளனமுன்னதாக ஜெஸ்ஸோர் – டாக்கா பெனாபோல் விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில்பேர் கொல்லப்பட்டனர்.

தேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் காசி ஹபிபுல் அவல்பொதுத்தேர்தல் சட்டபூர்வமாகவே நடைபெறுவதாகஉறுதி தெரிவித்திருக்கிறார்பரவும் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தின்களமிறக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிக்கு ராணுவ பாதுகாப்பு

வன்முறையைத் தூண்ட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்டபிரதமர் ஹசீனா மறுபக்கம்எதிர்க்கட்சிகளின் பிரதான தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை கைது செய்து சிறையிலடைக்கஉத்தரவிட்டார்ஜனநாயகம் இல்லாமல் போனதுபொருளாதாரம் சீர்குலைந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்ஹசீனாவுக்கு எதிராக வலுவாக உள்ளனஅவர் மீண்டும் ஆட்சி அமைக்க நேரிடினும் நாட்டின் பொருளாதாரஸ்திரமின்மை பெரும் சவாலாக இருக்கும்.

இந்தியாவைச் சேர்ந்த மூவர் உட்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் பொதுத்தேர்தல் கண்காணிப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். 350 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 300 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுதேர்தலுக்குப் பிந்தைய நாடாளுமன்ற கட்சிகளின் பலத்தின் அடிப்படையில்அவற்றுக்கான நியமனம் நடைபெறும்.

சுமார் 2,000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்அவர்களில் 5.1% பெண்கள்உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்குதொடங்கும் வாக்குப்பதி மாலை 4 மணிக்கு முடிவடைய உள்ளதுவாக்குப்பதிவு முடிந்த வேகத்தில் வாக்கு எண்ணும்பணிகள் தொடங்கிதிங்கள்கிழமை காலை முதலே முடிவுகள் வெளியாக உள்ளன


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours